search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.டி.எம்.மில் தவற விட்ட ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியர்
    X

    ஏ.டி.எம்.மில் தவற விட்ட ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியர்

    கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆயிக்குளம் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் வேலன் என்பவர் நேற்று இரவு சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை யாரோ எடுக்காமல் விட்டு சென்று விட்டது தெரியவந்தது. பணம் தாமதமாக வந்ததால் அவர் கவனிக்காமல் சென்று இருக்கலாம் என்று கருதிய செந்தில் வேலன் ஏ.டி.எம். சென்டரில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார்.

    அதனை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் ஏ.டி.எம். அறையில் உள்ள கேமிராவையும், எந்திரத்தையும் ஆய்வு செய்து உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பேராசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். பேராசிரியர் செந்தில் வேலன் ஆடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதுடன் பகுதி நேரம் சாலையோர ஓட்டலில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×