search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டனுக்கு ஆக.14 வரை நீதிமன்ற காவல்
    X

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டனுக்கு ஆக.14 வரை நீதிமன்ற காவல்

    கோவையில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பெண் வார்டன் புனிதாவை ஆகஸ்ட் 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் பீளமேடு பகுதியில் விடுதி நடத்தி வந்தார். இதில் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்த விடுதியில் புனிதா(32) என்பவர் வார்டனாக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக புனிதா மீது புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிகள், பெண்களின் பெற்றோர் கடந்த 23-ந்தேதி விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததும் பீளமேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், வார்டன் புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவானார்கள். போலீசார் தேடுவதை அறிந்த ஜெகநாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து புனிதா தலைமறைவாக இருந்து வந்தார்.

    தனிப்படை போலீசார் புனிதாவை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பெண் வார்டன் புனிதா கோவை ஜே.எம்.6 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.  சரணடைந்த வார்டன் புனிதாவை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்ற வளாகத்தில் புனிதாவை மாதர் சங்கத்தினர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×