என் மலர்

  செய்திகள்

  வேலூரில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
  X

  வேலூரில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூரில் சிறுமியை மிரட்டி கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து வாலிபர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். #VelloreJail
  வேலூர்:

  வேலூர் கொணவட்டம் மதினா நகரை சேர்ந்தவர் ரஷீத் மகன் யூசப் (வயது 25). திருமணமான இவர், கொணவட்டத்தில் உள்ள ஒரு பாட்டில் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த கம்பெனியில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியும் வேலை பார்த்தார்.

  அப்போது யூசப் தனக்கு திருமணமானதை மறைத்து சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்தார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

  சிறுமியின் பெற்றோர், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீ சார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிந்து, யூசப்பை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பு வக்கீல் லட்சுமி பிரியா வாதாடினார்.

  வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி செல்வம் அறிவித்திருந்தார்.

  அதன்படி, நீதிபதி செல்வம் முன்பு யூசப் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் யூசப்பிற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

  இதையடுத்து, வேலூர் ஜெயிலில் யூசப் அடைக்கப்பட்டார்.
  Next Story
  ×