என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடைக்கப்பட்ட தி.மு.க. கல்வெட்டு.
    X
    உடைக்கப்பட்ட தி.மு.க. கல்வெட்டு.

    கோபியில் தி.மு.க. கல்வெட்டை சேதப்படுத்திய ஆசாமிகள்

    கோபியில் தி.மு.க. கொடி கம்பத்தையும், பெயர் பலகையையும் சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #DMK
    கோபி:

    கோபியில் சத்தி-ஈரோடு ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இதன் முன் தி.மு.க. சார்பில் தி.மு.க.தொழிலாளர் முன்னேற்ற சங்க கல்வெட்டும் கொடி கம்பமும் உள்ளது.

    இந்த கல்வெட்டை இரவு யாரோ சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அருகே உள்ள தி.மு.க. கொடி கம்பமும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. கொடி கம்பத்தை அடித்து தாக்கியதில் வளைந்து உள்ளது. அதில் உள்ள உதய சூரியன் சின்னமும் சேதப்படுத்தப்பட்டது. கொடியும் கிழிக்கப்பட்டது.

    இன்று காலை வந்து பார்த்தபோது தி.மு.க. தொழிற்சங்க பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    நேற்று நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து தி.மு.க. தொழிற்சங்கத்தினர் கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொடி கம்பத்தையும், பெயர் பலகையையும் தாக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #DMK
    Next Story
    ×