search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே கல்லணை கால்வாய் கரையில் உடைப்பு - சீரமைப்பதில் விவசாயிகள் மும்முரம்
    X

    தஞ்சை அருகே கல்லணை கால்வாய் கரையில் உடைப்பு - சீரமைப்பதில் விவசாயிகள் மும்முரம்

    தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தில் இன்று காலை திடீரென கல்லணை கால்வாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டது.
    பூதலூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய்க்கு 2700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தில் இன்று காலை திடீரென கல்லணை கால்வாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டது.

    அந்த கிராமத்தில் உள்ள கீழ்போக்குபாலம் கல்லணை கால்வாய் வலதுகரை பகுதியில் கரை உடைந்து உள்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பெருக் கெடுத்து சென்றது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் விரைந்தனர். கரை உடைப்பை சரிசெய்ய அந்த பகுதி விவசாயிகள் துணையுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


    லாரிகளில் மண்ணை கொண்டு வந்து கரை உடைப்பில் போட்டு கொட்டினர். ஆனால் தொடர்ந்து கரையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டே இருந்தது. இதனால் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுதிரண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கல்லணை கால்வாய் தண்ணீர் வந்த பிறகு பல பகுதிகளில் கரைகள் பலவீனமாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள கரை உடைப்பை இன்று மாலைக்குள் சரிசெய்து விடுவோம். முறையான குளங்கள், ஏரிகளின் கரைகளை தூர்வாராததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது உடைப்பு ஏற்பட்டு செல்லும் தண்ணீர் கள்ளபெரம்பூர் ஏரியை நோக்கி செல்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×