search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக் - உருளைக்கிழங்கு வர்த்தகம் ரூ.10 கோடி பாதிப்பு
    X

    5வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக் - உருளைக்கிழங்கு வர்த்தகம் ரூ.10 கோடி பாதிப்பு

    தொடரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைகிழங்கு வர்த்தகம் ரூ.10 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். #LorryStrike
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு ஊட்டி, குஜராத், கோலார் , கர்நாடகா, ஆக்ரா, நைனிடால், ஆசன், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 100 லோடு வரை உருளைக்கிழங்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து உருளைக்கிழங்குகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக உருளைகிழங்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வீதம் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்து லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் லாரி உரிமையளர்கள் சங்கத்தினர் மண்டி உரிமையாளர்களிடம் லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டுள்ளனர். இதனால் லாரிகள் பொது வேலை நிறுத்தும் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    இதே நிலை நீடித்தால் நிலைமை மோசமாக பாதிக்கப்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  #LorryStrike

    Next Story
    ×