search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவன கருவாடுகள் காய வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தீவன கருவாடுகள் காய வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    நாகையில் தீவன கருவாடுகள் காயவைக்கும் பணி மும்முரம்

    நாகை பகுதியில் அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற இடங்களில் தீவன கருவாடுகள் காயவைக்கும் பணியில் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் மீனவர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தொழிலாளர்களுக்கும் மீன் வர்த்தகம் கை கொடுத்து வருகிறது.

    நாகை மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட விசை படகுகள், பைபர் படகுகள் முலம் மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் கரையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சுறா, வஞ்சிரம், திருக்கை, கனவா, இறால், நண்டு மற்றும் கானாங்கெழுத்தி, மத்தி, கோலா போன்ற மீன்கள் சீசனுக்கு ஏற்றவாறு அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன.

    இவ்வாறு கொண்டு வரப்படும் மீன்கள் தனித் தனியாக ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் வெளி மாநில வியாபாரிகள் இறால், நண்டு, மத்தி மீன் போன்றவற்றை வாங்குவதற்கு இங்கேயே நிரந்தரமாக தங்கி உள்ளனர்.

    மீன்கள் மட்டுமின்றி தரம் பிரிக்கப்படும் மீன் வகைகளில் சிறிய அளவில் காணப்படும் ஒரு வகை கழிவு மீன்கள் காய வைக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தீவனம் தயாரிக்க கருவாடாக அனுப்பப்படுகிறது.

    தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் நாகை பகுதியில் அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம் போன்ற இடங்களில் தீவன கருவாடுகள் காயவைக்கும் பணியில் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



    Next Story
    ×