search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி சாலைக்கு எதிராக பேசிய வழக்கு - நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி
    X

    8 வழி சாலைக்கு எதிராக பேசிய வழக்கு - நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனு தள்ளுபடி

    8 வழி சாலைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 8 வழி பசுமை சாலையை எதிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானையும், பியூஸ் மானுசையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். 2 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானும், பியூஸ் மானுசும் ஜாமீன் கேட்டு ஓமலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தும்பிப்பாடி விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் மன்சூர் அலிகான் பேசிய ஆடியோ பதிவை போலீசார் தாக்கல் செய்தனர்.

    இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதே நேரம் ஓமலூர் கோர்ட்டில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையின் பேரில் பியூஸ் மானுசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    Next Story
    ×