search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ் 1 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம்
    X

    பிளஸ் 1 தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம்

    பிளஸ் 1 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தேர்விலும் மாணவிகளே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். #TNHSCResult #PlusOneResult2018 #ErodePlusonetop
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    பிளஸ் 1 தேர்வில் பள்ளி மாணாக்கராகவும் தனித் தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,668. பள்ளி மாணாக்கராய் தேர்வு எழுதியோர் 8,47,648. மாணவியரின் எண்ணிக்கை 4,54,215. மாணவர்களின் எண்ணிக்கை 3,93,433. பொதுப் பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 7,92,331. தொழிற்பாடப் பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 55,317. தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவியர் 94.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

    மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7070. இதில் 2054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2724 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    36,380 மாணவர்கள் 500-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் மாணவியர் எண்ணிக்கை 25412. மாணவர்களின் எண்ணிக்கை 10968.

    தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 97.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்து திருப்பூர் மாவட்டம் 96.4 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 96.2 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. #TNHSCResult #PlusOneResult2018 #ErodePlusonetop
    Next Story
    ×