search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு நிலம் 30 ஏக்கர் அபகரிப்பு - சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஆக்கிரமிப்புக்கு கடும் எதிர்ப்பு
    X

    அரசு நிலம் 30 ஏக்கர் அபகரிப்பு - சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஆக்கிரமிப்புக்கு கடும் எதிர்ப்பு

    தஞ்சை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    எம்.ஜி.ஆர் முதல்- அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடி இருப்பதை தவிர்ப்பதற்காக 58.17 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சை திருமலைசமுத்திரம் என்ற இடத்தில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

    சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கையகப்படுத்தப்பட்டதாத புகார் எழுந்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பி அங்கு கல்லூரி இயங்கி வருகிறது.

    நிலப் பரிவர்த்தனை முறையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தொடங்கி, அரசின் உயர் மாவட்ட அதிகாரிகள் வரை நிராகரித்த போதும் ஆக்கிரமித்த நிலங்களை சட்ட விரோதமாக கட்டிடங்களை கட்டி கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அரசின் பொது நிலத்தை தனியுடைமையாக்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    சிறைச்சாலைகளில் அதிக நெருக்கடியை கருத்தில் கொண்டு எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் தஞ்சையில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. திறந்தவெளி சிறைச்சாலை என்பது உயர்ந்த கோட்பாடு ஆகும். தவறு செய்தவர்களை கொன்று விட கூடாது. திருடன் தானாக திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இதுவே அந்த கோட்பாடுக்கு அர்த்தம் ஆகும். இதனால் தான் அங்கு திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க இருந்தது. இந்த இடத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பண பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து கொண்டு சட்டத்தை துஷ்பிரயோகம் பண்ணி ஆக்கிரமித்து கல்லூரி கட்டியுள்ளனர். பொதுவாக நாட்டின் சொத்தாக இருக்க வேண்டிய இடம் தனிநபர் சொத்தாக போய் விட்டது.

    இப்போது உள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை தூக்கி எறிய வேண்டும். யாரையும் அடித்து விட முடியும், எதையும் விலைக்கு வாங்க முடியும் என்று நடந்து கொள்கிறார்கள்.

    திறந்த வெளி சிறைச்சாலை அமைப்பது எம்.ஜி.ஆர் கண்ட கனவு. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த அரசாங்கம் ஆக்கிரமிப்பை அகற்றி அதே இடத்தில் தான் சிறைச்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் தஞ்சையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×