என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
நிர்மலாதேவி வழக்கு - சி.பி.சி.ஐ.டி. 9 தனிப்படைகள் அமைத்தும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை
By
மாலை மலர்2 May 2018 3:43 AM GMT (Updated: 2 May 2018 3:43 AM GMT)

பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 விசாரணை அதிகாரிகளின் தலைமையில் 9 தனிப்படை அமைத்தும் விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லை.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு செல்போனில் அழைத்த விவகாரத்தில் மாவட்ட போலீசார் அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் போலீஸ் டி.ஜி.பி. வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனைதொடர்ந்து முதலில் சி.பி.சி.ஐ.டி. உதவி போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் தென்மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துசங்கரலிங்கம், கருப்பையா, ஷாஜிதாபேகம் ஆகிய 4 பேரைக் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பம் ஏற்படும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தென்மாவட்டங்களில் இருந்து 9 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்களை வரவழைத்து அவர்கள் தலைமையில் 9 தனிப்படைகளை அமைத்தனர். இந்த தனிப்படைகளில் 30-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடம் பெற்று இருந்தனர். விசாரணையின் தொடக்கத்தில் இத்தனிப்படையினர் அருப்புக்கோட்டை கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் என வெவ்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
ஆனாலும் நிர்மலாதேவி விசாரணையின் போது குறிப்பிட்ட பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியை இத்தனிப்படையினரால் கைது செய்ய முடியவில்லை. பேராசிரியர் முருகன் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் விசாரணைக்கு ஆஜரானதாக அவரது மனைவி சுஜா தெரிவித்துள்ளார். பேராசிரியர் கருப்பசாமி மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியை தொடர்ந்து பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டுமே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். இந்த விசாரணையிலும் குறிப்பிட தகுந்த தகவல் வெளியாகாததால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கை அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.
மொத்தத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியைநிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டவர்களை அழைத்து மட்டுமே விசாரணை நடத்தினர். இவர்கள் அழைத்து விசாரணை நடத்தப்பட்டதற்கும், இந்தவழக்கு எந்த நோக்கத்திற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதோ அந்த நோக்கத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாத நிலையே இருந்தது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணை எல்லையை அதற்கு மேல் விரிவுபடுத்த முன் வரவில்லை. இதனால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட 3 பேரோடு விசாரணை முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு விட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கு மாற்றப்படும் போது மாநில போலீஸ் நிர்வாகம் இந்த வழக்கு முக்கியமானது என்று கருதியே வழக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்தவழக்கு விசாரணையில் பேராசிரியை நிர்மலாதேவி குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் யார் என்பதை கண்டறிவதில் தான் வழக்கின் முக்கியத்துவம் உள்ளது என்பதை எடுத்துக்கொள்ளவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
உயர்நிலை விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கையிலாவது இப்பிரச்சினை குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என சமூகஆர்வலர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Next Story
×