என் மலர்

  செய்திகள்

  பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்து வெளியேற விரும்பும் முதியோர்கள்
  X

  பாலேஸ்வரம் காப்பகத்தில் இருந்து வெளியேற விரும்பும் முதியோர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இருந்து வெளியேறுவதற்கு 20 முதியோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர்களை வேறு தொண்டு நிறுவனத்துக்கு மாற்ற உள்ளனர்.
  காஞ்சிபுரம்:

  உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடலை எடுத்து வரப்பட்டது.  அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், ஆர்டிஓ தலைமையிலான குழுவினர் இன்று பாலேஸ்வரம் காப்பகம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, காப்பகத்தில் இருந்து, வெளியேற விருப்பம் தெரிவித்த சுமார் 20 முதியோர்களை, மதுராந்தகத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  #tamilnews
  Next Story
  ×