search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முடிவுக்கு வருமா ஸ்டிரைக்: பட்டாசு உரிமையாளர்கள் நாளை கலந்தாய்வு
    X

    முடிவுக்கு வருமா ஸ்டிரைக்: பட்டாசு உரிமையாளர்கள் நாளை கலந்தாய்வு

    முடிவுக்கு வருமா ஸ்டிரைக்: பட்டாசு உரிமையாளர்கள் நாளை கலந்தாய்வு

    சிவகாசி:

    பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என கொல்கத்தாவை சேர்ந்த தத்தா என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பட்டாசு வெடிக்க தடைகுறித்து மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது.

    உச்சநீதிமன்றம் பட்டாசு தொடர்பான வழக்கை மீண்டும் எடுத்து கொண்டுள்ளதால் அத்தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

    எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.

    இதனை வலியுறுத்தி சிவகாசியில் நேற்று முதல் 860 பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இன்றும் 2-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்றது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தடை குறித்து வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் சிவகாசியில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இதில் பட்டாசு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் அச்சுதொழில், போக்குவரத்து உள்ளிட்ட உப தொழிலை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதில் பட்டாசு உற்பத்திக்கு அந்தந்த மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்திந்து ஆதரவு கேட்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் வேலை நிறுத்தத்தை தொடர்வதா? அல்லது தற்காலிகமாக கை விடுவதா? என ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    Next Story
    ×