search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு கொள்ளையில் ஈடுபட்ட 11 பேரின் பின்னணி
    X

    கொடநாடு கொள்ளையில் ஈடுபட்ட 11 பேரின் பின்னணி

    கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூரை கொன்று, பொருட்கள் கொள்ளையடித்த வழக்கில் 11 பேர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
    நீலகிரி:

    கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூரை கொன்று, பொருட்கள் கொள்ளையடித்த வழக்கில் 11 பேர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகள் உதவியுடனும் 11 பேர் கும்பலை போலீசார் அடையாளம் கண்டனர். அவர்கள் குறித்த விவரம் வருமாறு

    1. கனகராஜ்-ஜெயலலிதாவின் கார் டிரைவர்

    2. சயன்-கனகராஜின் கூட்டாளி

    3. மனோஜ்-சாமியார், ஹவாலா கும்பல் தலைவன்

    4. சந்தோஷ்

    5. தீபு

    6. சதீ‌ஷன்

    7. உதயகுமார்

    8. ஜிபின் ஜோய்

    9. ஜம்சீர் அலி
     
    10. குட்டி என்ற ஜிஜின்

    11. சங்கனாச்சேரியை சேர்ந்த சாமி என்ற மனோஜ்

    இதில் கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார். சயன் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மனோஜ் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தோஷ், தீபு, சதீ‌ஷன், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வேலை என்று எதுவும் கிடையாது. கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். மனோஜ் மூலம் ஹவாலா பணம் கடத்தும் வேலையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஜபின்ஜோய், ஜம்சீர் அலி ஆகியோர் மோசடி வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே திருட்டு, மோசடி வழக்குகள் உள்ளது. குட்டி என்ற ஜிஜின், சங்கனாச்சேரி மனோஜ் ஆகியோரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×