என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவர் படுகொலை: நண்பர்கள் 3 பேர் கைது
    X

    தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவர் படுகொலை: நண்பர்கள் 3 பேர் கைது

    மது குடிக்கும் தகராறில் தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவரை படுகொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவான்மியூர்:

    துரைப்பாக்கத்தை அடுத்த கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 27). கால் டாக்சி டிரைவர்.

    நேற்று இரவு அவர் அதே பகுதியில் நண்பர்கள் மணிகண்டன், மாரிமுத்து, கோபி ஆகியோருடன் மது குடித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து உள்பட 3 பேரும் சேர்ந்து குமாரை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவரது தலையில் கல்லை போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை தொடர்பாக மணிகண்டன், மாரிமுத்து, கோபியை கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×