என் மலர்

  செய்திகள்

  இந்தியாவில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி கைவினைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: பொன்.ராதாகிருஷ்ணன்
  X

  இந்தியாவில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி கைவினைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: பொன்.ராதாகிருஷ்ணன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி கைவினைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

  கன்னியாகுமரி:

  அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையம் மற்றும் நாகர்கோவில் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம் ஆகியவை இணைந்து நடத்திய கைவினைக் கலைஞர்களுக்கான மத்தியஅரசின் ரொக்கமில்லா பணபரி மாற்றம் சம்பந்தமான பீம் செயலி பதிவிறக்கம் செய்வதற்கான விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் நடந்தது.

  முகாமின் தொடக்க விழாவிற்கு நாகர்கோவில் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மைய உதவி இயக்குனர் பாலு தலைமை தாங்கினார். கைவினைப் பொருட்கள் வளர்ச்சி அதிகாரி ரூப்சந்தா வரவேற்றார். முகாமை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

  இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள கைவினைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், அரபுநாடுகள், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள 40 வகையான கைவினைப் பொருட்கள் 15 ஆயிரம் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

  பாரத பிரதமரின் முத்ரா கடன் உதவி திட்டத்தின் வழியாக 121 பேருக்கு ரூ.35 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கைவினை விரிவாக்க மைய அலுவலகம் முலம் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் வழியாக 24 ஆயிரம் கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய அளவிலான ஸ்மார்ட் கார்டு இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

  மேலும் 3 ஆயிரத்து 621 கைவினைக் கலைஞர்கள் எல்.ஐ.சி வழியாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளார்கள்.

  365 மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி 38 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள திட்டங்கள் வாயிலாக 63 கைவினைப் பயிற்சி முகாம் 21 ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 10 கைவினை பொருட்காட்சி போன்றவை நடைபெற்று வருகிறது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  நிகழ்ச்சியில் நாகர்கோவில் நபார்டு வங்கி துணை மேலாளர் மார்டின் பிரகாசம், கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சிவசத்தியவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். வீனா நன்றி கூறினார்.

  Next Story
  ×