என் மலர்

    செய்திகள்

    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: பரங்கிப்பேட்டை கோர்ட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆஜர்
    X

    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: பரங்கிப்பேட்டை கோர்ட்டில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆஜர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.

    சிதம்பரம்:

    தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.

    பெத்தாங்குப்பம் பகுதியில் அவர் பிரசாரத்துக்கு சென்றபோது தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையொட்டி கோர்ட்டில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆஜரானார்.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு வாசுதேவன் உத்தரவிட்டார்.

    Next Story
    ×