என் மலர்
செய்திகள்

ஆம்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் பட்டுவாம்பட்டியை சேர்ந்தவர் ஒரு விவசாயி. இவரது 16 வயது மகள், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
கடந்த 7-ந் தேதி வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில், ஆம்பூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த ரவி மகன் சூரிய பிரகாஷ் என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
கடத்தப்பட்ட மாணவி, மீட்கப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் மாணவி தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், வாலிபர் சூரியபிரகாஷ் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதற்காக வீட்டில் இருந்து நகைகள், பணத்தை அள்ளிக் கொண்டு வா, ஓடி விடலாம்? என்று கூறி உள்ளார். இதை நம்பி மாணவியும் வந்துள்ளார்.
மாணவியை கடத்திய சூரிய பிரகாஷ், ரகசிய இடத்தில் வைத்து கற்பழித்துவிட்டு, நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பியதாக கூறப்பட்டுள்ளது. புகாரை பதிவு செய்த போலீசார், வாலிபர் சூரியபிரகாஷை தேடி வருகிறார்கள்.