என் மலர்

  செய்திகள்

  டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல்: அனைத்து விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
  X

  டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல்: அனைத்து விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 25-ந்தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது.
  திருவாரூர்:

  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தஞ்சை மண்டல அவசர கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார்.

  மாவட்ட செயலாளர்கள் சேசரன் செந்தில் குமார், ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  காவிரி நீர் இல்லாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கை இல்லை என்ற நிலையில் மத்திய அரசு கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற்ற தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. எனவே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி தொடங்கி தீர்வு ஏற்படும் வரை தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

  போராட்டத்துக்கு பொதுமக்கள், இளைஞர்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×