என் மலர்

    செய்திகள்

    திருச்சுழியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: மாணவி பலி
    X

    திருச்சுழியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: மாணவி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியான நிலையில் மேலும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் திருச்சுழி கிராமத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள வடக்குப்பட்டி, பரளச்சி, செங்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடக்குப்பட்டியைச் சேர்ந்த மனோகரன் மகள் ஜெனிபர் (வயது 11) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத் திரியில் கடந்த 11-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு ஜெனிபர் பரிதாபமாக இறந்தார். பலியான ஜெனிபர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தார்.

    மாணவி இறந்ததைத் தொடர்ந்து வடக்குப்பட்டி, பரளச்சி கிராமங்களில் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஏற்கனவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தவர்கள் தங்களுக்கும் டெங்கு பாதிப்பு இருக்கலாம் என அச்சப்பட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அரசின் சுகாதாரக்குழுவினர் குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    Next Story
    ×