search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் புத்தக கண்காட்சி: 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை நடக்கிறது
    X

    சென்னையில் புத்தக கண்காட்சி: 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை நடக்கிறது

    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.
    சென்னை:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் ‘பபாசி’ புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு உலக புத்தகத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடும் நோக்கத்துடன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.

    21-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். விடுமுறை நாட்களான ஏப்ரல் 22, 23, 29, 30, மே 1-ந்தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. நுழைவுக் கட்டணம் இலவசம்.

    குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களுக்கு என்று சிறப்பு அரங்குகள் இடம் பெறுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×