என் மலர்

  செய்திகள்

  பெண்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்கிரமராஜா
  X

  பெண்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்கிரமராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டாஸ்மாக் கடையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பெண்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
  விழுப்புரம்:

  விழுப்புரத்தில் வருகிற மே 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பு சார்பில் இந்திய வணிகர் தின வளர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது.

  இதையொட்டி வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகளின் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

  இதைத்தொடர்ந்து இன்று காலை விழுப்புரத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவரும், தேசிய துணைத்தலைவருமான விக்கிரமராஜா வருகை தந்தார். பின்னர் மாநாடு நடைபெறும் ஜானகிபுரம் பகுதிக்கு சென்று பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

  பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  விழுப்புரத்தில் வருகிற மே 5-ந் தேதி 34-வது வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமைய ஒவ்வொரு நிர்வாகிகளும் இந்த மாநாட்டை தங்களது வீட்டு விழாபோல் எண்ணி உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  டெல்லியில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  இந்த போராட்டத்துக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும்.

  வணிகர்களை வஞ்சிப்பது போல் விவசாயிகளையும் பிரதமர் மோடி வஞ்சிக்கின்றார்.

  திருப்பூரில் நேற்று டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்க செயலாகும். அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் மோகன், மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன், விழுப்புரம் சேம்பர் ஆப் காமர்ஸ், பொதுச்செயலாளர் பிரேம்நாத், பொருளாளர் கலைமணி ஆகியோர் உடனிருந்தனர்.
  Next Story
  ×