என் மலர்

    செய்திகள்

    விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: நாராயணசாமி
    X

    விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: நாராயணசாமி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து கோவிலில் பங்குனி உத்திர மண்டபத்தில எழுந்தருளிய நம்பெருமாள், தாயாரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவேன்.

    டெல்லியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான விவசாய கடனை முழுமையாக மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×