என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி நிலக்கரி சேமிப்பு கிடங்கில் ‘திடீர்’ தீ
    X

    நெய்வேலி நிலக்கரி சேமிப்பு கிடங்கில் ‘திடீர்’ தீ

    நெய்வேலி நிலக்கரி சேமிப்பு கிடங்கில் ‘திடீர்’ தீப்பற்றியது. தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் நீர்த்தெளிப்பான் கருவி மூலம் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி மந்தாரக்குப்பம் பழைய பஸ்நிலையம் அருகே என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கு உள்ளது. முதலாவது சுரங்கத்தில் தோண்டப்படும் நிலக்கரி இங்கு சேமித்து வைக்கப்படுகிறது.

    நேற்று மாலை சேமிப்பு கிடங்கின் உள்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து அங்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்தனர். நீர்த்தெளிப்பான் கருவி மூலம் தீ பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரி சேமித்து வைக்கும் கிடங்கில் அதிக வெப்பம் காரணமாக உள்பகுதியில் லேசாக தீப்பற்றியது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது. இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றனர்.

    Next Story
    ×