என் மலர்
செய்திகள்

நிர்வாகிகள் கூட்டத்தில் ஜி.கே. வாசன் பேசிய போது எடுத்த படம்.
மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்தால் போராட்டம்: ஜி.கே. வாசன்
கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் கூறினார்.
திருவிடைமருதூர்:
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் விவசாயிகளின் 37 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தது போல் தமிழகத்திலும் தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ள தவறி விட்டன.
விவசாயிகள் நலன் சார்ந்த அரசுகளாக செயல்பட வேண்டும். நீதிமன்ற ஆணைப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க கூடாது. அக்கடைகளை திறந்தால் மக்களோடு த.மா.காவும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடும்.
த.மா.கா.சார்பில் மாவட்டங்கள் தோறும் ஆலோசனைகளை நடத்தி உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அனைத்து பதவிகளிலும் போட்டியிடும் அளவுக்கு நிர்வாகிகளை தயார்படுத்தி வருகிறோம்.
உள்ளாட்சி தேர்தல் வரும் போது கூட்டணியா? தனித்து போட்டியா? என்பது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது த.மா.கா. தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாநில செயலாளர்கள் சாதிக் அலி, அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.

Next Story