search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே  மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு
    X

    அரியலூர் அருகே மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்: அ.தி.மு.க. நிர்வாகி மீது வழக்கு

    அரியலூர் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் ஊராட்சி தெத்தேரி கிராமம் வெள்ளாற்றில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மணல் ஏற்றிய 2 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனிடையே அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ், அவரது சகோதரர் ரமேஷ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் போலீஸ் நிலையம் சென்று உதவி ஆய்வாளர் கமலஹாசனிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் மற்றும் லாரிகளையும் எடுத்து சென்றனர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாநிதி விசாரணை நடத்தி, அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ், அவரது சகோதரர் ரமேஷ் மற்றும் சிலர் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், சுரங்கம் மற்றும் கனிமவள பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

    இதற்கிடையே அ.தி.முக. ஒன்றிய செயலாளர் மீது புகார் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசனை தூத்தூர் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து அரியலூர் மாவட்ட எஸ்.பி. அணில்குமார் கிரி உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×