என் மலர்
செய்திகள்

மத்திய மந்திரியை சந்திக்க நெடுவாசல் போராட்ட குழுவினர் டெல்லி சென்றனர்
மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசுவதற்காக நெடுவாசல் போராட்டக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர்.
ஆலந்தூர்:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நெடுவாசல் போராட்டக்குழுவை சேர்ந்த சரவணன், செந்தில்தாஸ், சுரேஷ் உள்பட 15 கொண்ட குழுவினர் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:-
நெடுவாசல், மாங்காடு, வடகாடு, கோட்டைக்காடு, அனைவயல் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தி பேச டெல்லி செல்கிறோம்.
பொதுமக்கள் வாழும் பகுதியிலும், விவசாய பகுதிகளிலும் இருந்து இந்த திட்டம் முழுமையாக விலக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் டெல்லிக்கு செல்கிறோம். வேறு எந்தவிதமான சமாதானத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களின் ஒரே இலக்கு நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நெடுவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயமும், மக்களின் வாழ்வாதாரம் அழியும். இதனால் திட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் தான் செல்கிறோம். நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
நெடுவாசல் போராட்டத்தை விலக்கி கொள்ளவில்லை. தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் போராட்டகளத்திற்கு வந்தனர். மாநில அரசு அனுமதி தராது என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.
போராட்ட களத்தின் அருகே பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story