search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் வழியாக சென்னை, திருச்சி, நாகர்கோவில், கிருஷ்ணராஜபுரத்துக்கு சிறப்பு ரெயில்கள்
    X

    சேலம் வழியாக சென்னை, திருச்சி, நாகர்கோவில், கிருஷ்ணராஜபுரத்துக்கு சிறப்பு ரெயில்கள்

    சேலம் வழியாக சென்னை, திருச்சி, நாகர்கோவில், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    சேலம்:

    சேலம் வழியாக சென்னை, திருச்சி, நாகர்கோவில், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    சிறப்பு கட்டண ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்க உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - திருச்சி இடையே சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு கட்டண ரெயில் (எண்: 06047) வருகிற 21-ந்தேதி, 24-ந்தேதி, 28-ந்தேதி, 31-ந்தேதிகளில் எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (எண்: 06048) 20-ந்தேதி, 23-ந்தேதி, 27-ந்தேதி, 30-ந்தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி, சேலம் டவுன், சேலம் ஜங்‌ஷன், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர், குளித்தலை, திருச்சி கோட்டை ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

    திருச்சி - கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரெயில் (எண்: 06049) நாளை (19-ந்தேதி), 22-ந்தேதி, 26-ந்தேதி, 29-ந்தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் சென்றடையும்.

    இந்த ரெயில் திருச்சி கோட்டை, குளித்தலை, கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், குப்பம், பங்காருபேட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை - நாகர்கோவில் சிறப்பு ரெயில் (எண்00504) 22-ந்தேதி இரவு 9.25 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரெயில் திருநெல்வேலியில் மட்டுமே நிறுத்தப்படும்.

    கொச்சுவேலி -திருச்சி சிறப்பு ரெயில் (எண்00506) வருகிற 24-ந்தேதி இரவு 10.20 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருச்சி சென்றடையும். இந்த ரெயில் திருநெல்வேலி, மதுரையில் மட்டுமே நிறுத்தப்படும்.

    திருச்சி - ரேணிகுண்டா சிறப்பு ரெயில் (எண்00507)வருகிற 25-ந்தேதி இரவு 11.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு ரேனிகுண்டா சென்றடையும். இந்த ரெயில் விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×