என் மலர்
செய்திகள்

இளம்பெண் கொலைக்கு உல்லாச போட்டி காரணமா?: 8 வாலிபர்களை பிடித்து போலீஸ் விசாரணை
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஆதித்தன் (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கில்டா ராணி என்ற ஷாலினி (வயது 27).
இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் ஆதித்தனும், ஷாலினியும் பிரிந்து வாழ்கிறார்கள்.
ஆதித்தன் தோவாளையில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஷாலினி மட்டும் மங்கம்மாள் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனியாக வசித்தாலும் அடிக்கடி ஷாலினியை சந்தித்து அவருக்கு தேவையான பண உதவிகளை ஆதித்தன் செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு ஷாலினியை பார்ப்பதற்காக ஆதித்தன் வீட்டுக்கு சென்றார். அப்போது முன் பக்க கதவு பூட்டிக்கிடந்தது. அதேசமயம் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. உடனே பின் பக்கம் வழியாக ஆதித்தன் வீட்டுக்குள் சென்றார்.
அங்கு படுக்கை அறையில் நிர்வாண நிலையில் ஷாலினி பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, கைகளில் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்டு கட்டில் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது.
ஷாலினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதித்தன் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஷாலினியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஷாலினியை கொன்றவர்கள் யார், எதற்காக கொன்றனர்? என்பது குறித்து போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். செக்ஸ் விவகாரத்தில் ஷாலினி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஷாலினி சில ஆண்டுகள் நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். அதன்பின்னர் பக்கத்தில் உள்ள செங்கல் சூளையிலும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பல வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இரவு, பகல் என்றும் பாராமல் அடிக்கடி தனியாக வசிக்கும் ஷாலினி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். இதனை ஷாலினியின் வீட்டருகே வசிப்பவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் ஷாலினியின் பிணம் அருகே கிடந்த அவரது செல்போனையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அந்த செல்போனில் ஏராளமான வாலிபர்களின் செல்போன் எண்கள் பதிவாகி இருந்தது. அந்த வாலிபர்களுடன் ஷாலினி மணிக்கணக்கில் செல்போனில் பேசி நேரத்தை செலவிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவில் 2 வாலிபர்கள் ஷாலினி வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் ஷாலினி கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். அவர்கள் ஷாலினியை கற்பழிக்க முயன்று அந்த முயற்சி தோல்வியில் முடிந்து கொலையாகி இருக்கலாம், அல்லது உல்லாச போட்டியில் அவரை அந்த வாலிபர்கள் கொன்று விட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷாலினி கொலை தொடர்பாக அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்த 8 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே ஷாலினி கொலையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.