search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.
    X
    கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு.

    தேனியில் பரவலாக மழை: வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

    தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 110.80 அடியாக உள்ளது. 836 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 23.29 அடியாக உள்ளது. வரத்து 52 கன அடி. திறப்பு 40 கன அடி. மஞ்சளாறு நீர் மட்டம் 33 அடி. வரத்து 35 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 73.37 அடி. வரத்து 81 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இப்பகுதியில் 14 மி.மீ மழை பெய்தது. இதே போல மஞ்சளாறு அணைப் பகுதியிலும் 1 மி.மீ மழை பெய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறட்சியால் தண்ணீர் வரத்தின்றி காணப்பட்ட சோத்துப்பாறை அணையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் அணை முழு கொள்ளளவை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 1.8, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 8, வைகை அணை 3.8, கொடைக்கானல் 22.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.



    Next Story
    ×