என் மலர்

  செய்திகள்

  போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
  X

  போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து சேலம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
  சேலம்:

  சேலம் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டுவாக இருந்த ராஜ் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.

  சீலநாயக்கன்பட்டிக்கும் கொண்டலாம்பட்டிக்கும் இடையே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் உள்ள சந்தில் 7 பேர் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

  இந்தக் கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார், முருகன், பாலன் என்ற பாலகிருஷ்ணன், சாத்தான் எனற ராஜா, பிரபு, வீரமணி, பன்னீர் செல்வம் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

  இந்த வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் இன்று காலை தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

  Next Story
  ×