என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் சிறப்பு பூஜை
  X

  திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடவே சிறப்பு பூஜை நடத்தியதாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் கூறினர்.
  திருவண்ணாமலை:

  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார். இதற்காக அவர், நேற்றிரவு திருவண்ணாமலைக்கு வந்தார்.

  இரவில் ஒரு விடுதியில் தங்கிய டி.டி.வி. தினகரன், இன்று காலை திருவண்ணாமலை அருகே ஓரந்தவாடி என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார்.

  அந்த அம்மன் கோவிலில் முன்னதாகவே சிறப்பு யாக பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற டி.டி.வி.தினகரன் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடவே சிறப்பு பூஜை நடத்தியதாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் கூறினர்.

  பூஜைக்கு பிறகு டி.டி.வி. தினகரனிடம், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

  அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் ‘நான்’ போட்டியிடுவது குறித்து ஆட்சி மன்ற குழு கூடி முடிவு செய்யும். ஓ.பன்னீர் செல்வம் அணி இரட்டை இலை சின்னத்தில் வட இந்தியாவில் வேண்டுமானால் போட்டியிடலாம்.

  ஏனெனில் அங்கு இரட்டை இலை சின்னம் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் காணாமல் போய்விடுவார். தி.மு.க.விலும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரைவில் அணிமாறவும் வாய்ப்பு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×