என் மலர்
செய்திகள்

உச்சக்கட்டத்தை எட்டியது வடகாடு போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆண்கள் மொட்டை
வடகாடு போராட்டம் தொடங்கிய 8-ம் நாளை குறிக்கும் வகையில் அங்கு 8-ம் நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. ஆண்கள் போராட்ட களத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மொட்டை அடித்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நல்லாண்டார் கொல்லை ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வடகாட்டில் நேற்று 8-வது நாளாகவும், நல்லாண்டார் கொல்லையில் 23-வது நாளாகவும் போராட்டம் நீடித்தது. இதில் வடகாட்டில் நடந்த போராட்டத்தில் கீழாத்தூர், கருக்காக்குறிச்சி, தோழன் பட்டி, கல்லிக்கொல்லை, வாணக்கன்காடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள், பெண்கள் தங்கள் பகுதியில் விளைந்த பயிர்களை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
வடகாடு போராட்டம் தொடங்கிய 8-ம் நாளை குறிக்கும் வகையில் அங்கு 8-ம் நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. கொள்ளிப்பானை, கருப்புக் கொடி ஏந்தி கோவணம் அணிந்து அரை நிர்வாணத்துடன் வந்த ஆண்கள் போராட்ட களத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மொட்டை அடித்துக் கொண்டனர்.
அதேபோல் பெண்கள் தலைவிரி கோலத்தில் ஒன்றாக அமர்ந்து ஒப்பாரி வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் கள்ளிக் கொல்லை கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் படத்தை வைத்து அதற்கு படையலிட்டனர். வடகாடு கிராமம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.
மேலும் போராட்டத்தில் இருந்து திட்டம் கைவிடப்படும் வரை யாரும் பின் வாங்கக்கூடாது. ராணுவம் கொண்டோ, போலீசாரை கொண்டோ தடியடி நடத்தி நம்மை கலைக்க நினைத்தாலும் களத்தில் நின்று போராட வேண்டும் என்று அங்கு கூடியிருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் பங்கேற்ற ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் கூறுகையில், வருகிற 16-ந் தேதி கூடும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு தடை விதிக்க வலியுறுத்தியும், அவசர சட்டம் கொண்டு வரவும் போராடுவோம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தினந்தோறும் புதிய யுக்திகளை கையாண்டு வரும் வடகாடு கிராம மக்கள் இன்று 9-வது நாளாக போராட்ட களத்தில் திரண்டு வருகிறார்கள். போராட்டக் குழுவின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

Next Story