என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் பொருட்களுக்கு இறுதி சடங்கு: தி.மு.க.வினர் போராட்டம்
    X

    ரே‌ஷன் பொருட்களுக்கு இறுதி சடங்கு: தி.மு.க.வினர் போராட்டம்

    ரே‌ஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து தாம்பரத்தில் ரே‌ஷன் பொருட்களுக்கு இறுதி சடங்கு நடத்தி தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    ரே‌ஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதே போல் காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்றது.

    தாம்பரத்தில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு இன்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ரே‌ஷன் பொருட்கள் போன்று வரிசையாக மூட்டை கட்டி வைத்து இருந்தனர்.

    அதில் சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை மரணம் என்று எழுதி வைத்து இறுதி சடங்கு நடத்தினார்கள். அதன் அருகில் பெண்கள் சமையல் பாத்திரத்தை அடுப்பில் வைத்து உணவு பொருட்கள் இல்லாமல் திண்டாடுவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் நகரில் பெரியகுப்பம் ரே‌ஷன் கடை முன்பு நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் தலைமையிலும், நேதாஜி சாலையில் கமலக்கண்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வி.ஜி.ராஜேந்திரன்.எம்.எல்.ஏ., கலந்துகொண்டார்.

    காக்களூர் ம.பொ.சி.சாலை கடை முன்பு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், வெள்ளியூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.ராமகிருஷ்ணன், களாம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருப்பாச்சூரில் பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி, வெங்கத்தூரில் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.அரி கிருஷ்ணன், கடம்பத்தூரில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், ஆர்.டி.இ.ஆதிசே‌ஷன், கொண்டஞ்சேரியில் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊத்துக்கோட்டை பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ரே‌ஷன் கடையில் பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், போலீஸ் நிலையம் அருகே உள்ள கடையில் நகர செயலர் அப்துல் ரஷீத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    இதே போல ஊத்துக்கோட்டையில் மற்ற ரே‌ஷன் கடைகளில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், சும்சுதீன், அப்துல் ரகீம், சிராஜுதீன், மோகன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 62 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    நேமலூர் ரே‌ஷன் கடையில் ஊராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும், மாநெல்லூரில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையிலும், கும்மிடிப்பூண்டியில் மாவட்ட செயலாளர் கி.வேணு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.

    காஞ்சீபுரம் ரெயில் ரெயில் நிலைய சாலையில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நகர செயலாளர் சண்பிராண்டு ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எழிலரசன் எம்.எல்.ஏ. உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    செங்கல்பட்டு டவுனில் 33 வார்டுகளில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடந்தது. நகர செயலாளர் நரேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், பிரதாபன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    வண்டலூரில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மீஞ்சூர் நகர தி.மு.க. செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் மீஞ்சூர் மற்றும் நாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 2 இடங்களிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அத்திப்பட்டு ரே‌ஷன் கடை முன்பு கதிர்வேல் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மெதூர் பகுதி ரே‌ஷன் கடையில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் தசீஷ் தலைமையிலும், படப்பையில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையிலும், மேவலூர் குப்பத்தில் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×