என் மலர்tooltip icon

    செய்திகள்

    லைப்பகுதியில் பிடித்து எரியும் காட்டு தீயினால் கரும்புகை ஏற்பட்டு உள்ளதை படத்தில்காணலாம்.
    X
    லைப்பகுதியில் பிடித்து எரியும் காட்டு தீயினால் கரும்புகை ஏற்பட்டு உள்ளதை படத்தில்காணலாம்.

    தாளவாடியில் 3 நாட்களாக மலைப்பகுதியில் பிடித்து எரியும் தீ

    தாளவாடியில் கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் தீயினால் 300 ஹெக்டோரில் உள்ள மரங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும் அந்த பகுதியில் உள்ள மூலிகை மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.
    சத்தியமங்கலம்:

    தமிழக-கர்நாடக எல்லையில் தாளவாடி அருகே பிலிகிரி என்ற மலைப்பகுதி உள்ளது. 2 மலைகளை உள்ளடக்கிய செங்குத்தான இந்த மலைப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகும்.

    இந்த மலைப்பகுதியில் ஏராளமான புலிகள், சிறுத்தை புலி, யானை, மான், காட்டெருமை போன்ற வனவலங்குகள் உள்ளன.

    இந்த பிலிகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. கடும் வறட்சி காரணமாக அங்குள்ள மரங்கள், செடி-கொடிகள் காய்ந்து உள்ளன. இதன் காரணமாக தீ மளமள என்று பிடித்து எரிகிறது.

    அந்த பகுதியில் காற்று பலமாக வீசுவதால் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும் தீபரவி வருகிறது.

    கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் இந்த தீயினால் 300 ஹெக்டோரில் உள்ள மரங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. மேலும் அந்த பகுதியில் உள்ள மூலிகை மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.

    இந்த தீ விபத்தில் அந்த பகுதியில் சுற்றி திரியும் ஏராளமான வனவிலங்குகள் தீயில் கருகி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பல வன விலங்குகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து வருகின்றன.

    இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

    இரு மாநில எல்லையில் ஏற்பட்ட இந்த தீ சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதிக்கும் பரவி உள்ளது. இதனால் இங்குள்ள 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தீ எரிகிறது .

    இந்த தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் போராடி வருகிறார்கள். எனினும் கொளுந்து விட்டு எரியும் இந்த காட்டு தீயை அணைக்க முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.

    காட்டு தீ காரணமாக ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் வனப்பொருள் சேகரிக்கும், மலை வாழ் மக்கள் பிலிகிரிமற்றும் ஆசனூர் மலைபகுதிக்கு செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
    Next Story
    ×