என் மலர்
செய்திகள்

தமிழ்நாட்டு கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.300 கோடி சாமிசிலைகள் மீட்பு: பொன்.மாணிக்கவேல்
தமிழ்நாட்டு கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.300 கோடி சாமிசிலைகள் மீட்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டு 13 ஐம்பொன் சாமி சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி 2008-ம் ஆண்டு 9 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. மீதி உள்ள சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் 900 வருடம் பழமைவாய்ந்தவை ஆகும்.
டெல்லியில் உள்ள தொல்பொருள் துறையினர் மண்டல இயக்குனர் தலைமையில் இன்று 7 பேர் குழுவினர் பழவூர் கோவிலுக்கு சென்று அந்த சிலைகளை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த ஆய்வில் கலந்துகொள்வதற்காக நான் வந்துள்ளேன்.
மீட்கப்பட்ட சாமிசிலைகளில் ஐம்பொன் நடராஜர் சிலை மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ளது. அந்த சிலையின் வெளிநாட்டு மதிப்பு 25 லட்சம் டாலர் ஆகும். சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திரகபூர் கைது செய்யப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஜெர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குத்தான் அதிகளவு சாமிசிலைகள் கடத்தப்படுகிறது. தற்போது கடந்த 4 வருடத்தில் தமிழ் நாட்டில் இருந்து எந்த சாமிசிலைகளும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படவில்லை. கடத்தப்பட்டதாக நிரூபித்தால் என்னை சஸ்பெண்டு செய்யலாம். கோவில்களில் சிலை திருட்டை தடுக்க சிலைகள் பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு காமிரா, அபாய அலாரம் போன்ற பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள சாமிசிலைகளை மீட்டுள்ளோம். இன்னும் ரூ.1000 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் மீட்கப்பட வேண்டியது உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிலை கடத்தலில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியான தீனதயாளன் 6 மாதத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன.
குமரி மாவட்டத்தில் 1200 கோவில்களில் ஐம்பொன் சாமி சிலைகள் உள்ளன. இவைகளில் 300-க்கும் மேற்பட்ட கோவில்களில் 70 சதவீத சாமிசிலைகள் மிகவும் பழமையானது ஆகும். இந்த சிலைகளை பாதுகாக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. வேணுகோபால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story