என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 12 ஆண்டுகள் சிறை: அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 12 ஆண்டுகள் சிறை: அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 27). இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 11-9-2016 அன்று அங்குள்ள குளத்திற்கு குளிக்க வந்த 16 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராம்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×