என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி
    X

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி

    வேளாங்கண்ணி மாதா பேராலய கோபுரத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    வேளாங்கண்ணி:

    நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த மாதா பேராலயத்திற்கு தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பேராலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

    அதற்காக பேராலயத்தை சுற்றிலும் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பேராலயத்தின் கோபுரத்தில் உள்ள சிலுவை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்தநிலையில் தற்போது அந்த கோபுரத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கப்படும் சிலுவையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×