என் மலர்

  செய்திகள்

  புதிய வாக்காளர்களுக்கு இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை
  X

  புதிய வாக்காளர்களுக்கு இ-சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய வாக்காளர்கள் 15,26,985 பேருக்கு அரசு இ.சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

  சென்னை:

  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கடந்த 1.9.16 முதல் 30.9.16 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

  இந்த ஆண்டு புதிய வாக்காளர்கள் 15,26,985 பேருக்கு அரசு இ.சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்ட அடையாள எண்ணை சேவை மையத்தில் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

  செல்போன் எண்ணை பதிவு செய்யாதவர்கள் 1950 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×