என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூர் அருகே வேன் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    திருப்போரூர் அருகே வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

    திருப்போரூர் அருகே வேன் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த ஆமூர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருடைய மகன் வில்சன்(வயது 20). கிழக்குகடற்கரைசாலை நெம்மேலியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று இரவு வில்சன் ஆமூரிலிருந்து தன்னுடைய திருப்போரூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    திருப்போரூர்- மானாம்பதி சாலையில் உள்ள தனியார் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த வில்சன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து திருப்போரூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன் இவருடைய மகன் யுவராஜ்(வயது 4). வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த யுவராஜ் சாலையில் ஓரமாக நடந்து வந்தான். அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் யுவராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

    இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×