என் மலர்
செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்திய போலீஸ்காரர் ‘சஸ்பெண்டு’
கல்லூரி மாணவியை கடத்திய போலீஸ்காரரைபணியிடை நீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் வினோத் (வயது 35). இவர் கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நர்மதாவை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறினர். அதன்பின்னர் மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவியை போலீஸ்காரர் வினோத் கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாணவியின் தாயார் புதுநகர் போலீசில் புகார் செய்தார். மாணவியை கடத்தியதாக போலீஸ்காரர் வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அனுமதியில்லாமல் விடுமுறையில் இருப்பதாலும், போலீஸ்காரர் வினோத் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி போலீஸ்காரர் வினோத்தை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தையும் போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story