என் மலர்
செய்திகள்

நெற்குப்பையில் நடந்த மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரர்களை படத்தில் காணலாம்.
திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டித்தள்ளியதில் 30 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டித்தள்ளியதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகேயுள்ள நெற்குப்பையில் பொங்கல் விழாவை முன்னிட்டு நெற்குப்பை கிராமப்பகுதி முழுவதும் வீட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து காளைகளை கொண்டாடும் விதமாக மேலத்தெரு, கீழத்தெரு, நடுத்தெரு, ஆகிய பகுதிகளில் தொழுவம் அமைக்கப்பட்டு மாடுகள் பகுதி வாரியாக அவிழ்த்து விடப்பட்டது.
இம்மஞ்சுவிரட்டில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு களத்தில் பாய்ந்து சென்றது. இம்மஞ்சு விரட்டில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு சில மாடுகள் காளையருக்கு கட்டுப்பட்டும் ஒருசில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியும் சென்றன. இம்மஞ்சுவிரட்டில் 30 பேர் காயமடைந்தனர்.
இவர்களுக்கு நெற்குப்பை, சுகாதார மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சுகாதார மையத்தின் நடமாடும் மருத்துவ குழு வாகனம் முதலுதவி சிகிச்சையில் ஈடுபட்டிருந்தது. திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story