என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயல்நாட்டு குளிர்பானங்கள் விற்க கூடாது: விக்கிரமராஜா வேண்டுகோள்
    X

    அயல்நாட்டு குளிர்பானங்கள் விற்க கூடாது: விக்கிரமராஜா வேண்டுகோள்

    நாகை மாவட்டத்தில் மார்ச் 1-ந்தேதி முதல் வணிகர்கள் அயல்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது என்று விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    வேதாரண்யம்:

    நாகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    விழாவிற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் அம்பாள்குணசேகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் தென்னரசு முன்னிலை வகித்தார். நாகை தெற்கு மாவட்ட செயலாளர் குகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய வணிகர் சம்மேளத்தின் தேசிய துணைத்தலைவருமான விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர்.

    பின்னர் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அயல்நாட்டு குளிர்பானங்களை பயன்படுத்துவது இல்லை என்று மாணவர்கள் கூறினர். அதனை வலியுறுத்தும் வகையில் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்தவர்கள் அயல்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்திலும் மார்ச் 1-ந்தேதி முதல் வணிகர்கள் அயல்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வர்த்தக நிறுவனங்களில் புகுந்து உரிமம் வாங்க வேண்டும் என்று கூறி பணம் பறிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

    இதுபோன்று அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் புகார் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×