search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடுகத்தூரில் கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் 2 பேர் கைது
    X

    ஒடுகத்தூரில் கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் 2 பேர் கைது

    டாக்டருக்கு படிக்காமலேயே ஒடுகத்தூரில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பஸ் ரோட்டை சேர்ந்தவர் விஜய செட்டியார். இவருடைய மகன் யுவராஜ் என்கிற பெருமாள் (வயது 38), அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இங்கு ஆங்கில முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    இதேபோல ஆம்பூரை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் ரமேஷ் (48), ஒடுகத்தூர் கிடங்கு தெருவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வந்தார். இவரும் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தனர். இவர்கள் இருவரும் டாக்டருக்கு முறையாக படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று வேப்பங்குப்பம் போலீசாருக்கு புகார்கள் சென்றன.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் 2 கிளினிக்கிற்கும் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது இருவரும் எம்.பி.பி.எஸ். படிக்கவில்லை என்பது தெரியவந்தது. இவர்களில் யுவராஜ் என்கிற பெருமாள் பி.எஸ்சி படித்து விட்டு சிகிச்சை அளித்துள்ளார். ரமேஷ் பிளஸ்-1 படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்து ஊசி உள்ளிட்ட மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×