என் மலர்

  செய்திகள்

  வேதாரண்யம் அருகே வீடு புகுந்து பாட்டியை தாக்கி கல்லூரி மாணவி கடத்தல்
  X

  வேதாரண்யம் அருகே வீடு புகுந்து பாட்டியை தாக்கி கல்லூரி மாணவி கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே பாட்டியை தாக்கி விட்டு பட்டதாரி பெண்ணை கடத்தி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  வேதாரண்யம்:

  வேதாரண்யம் அருகே தென்னடார் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மகள் லாவண்யா (வயது 20). வேதாரண்யத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

  அவரது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு சென்றுவர முடியாததால் வேதாரண்யம் அருகே வடகட்டளை பகுதியில் உள்ள அவரது பாட்டி சரோஜா வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

  வழக்கம் போல் நேற்று மாலை லாவண்யா கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் விஜயன் என்பவர் வீட்டிற்குள் புகுந்து சரோஜாவை தாக்கி விட்டு பேத்தி லாவண்யாவை கடத்தி சென்று விட்டார்.

  இதில் பலத்த காயமடைந்த சரோஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இது குறித்து சரோஜா வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து லாவண்யாவை கடத்தி சென்ற விஜயனை தேடி வருகின்றனர்.

  இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×