என் மலர்

  செய்திகள்

  ஈரோட்டில் நவீன விளையாட்டு மைதான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  X

  ஈரோட்டில் நவீன விளையாட்டு மைதான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் நவீன இறகு பந்து தளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

  ஈரோடு:

  ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மாணவிகள் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழக பள்ளி கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது அவர் விளையாட்டு விடுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாராட்டினார்.

  அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் நவீன இறகு பந்து தளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து விடும்.

  இந்த ஆய்வின் போது கல்வித்துறை அமைச்சருடன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராமகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.

  Next Story
  ×