என் மலர்

  செய்திகள்

  கொள்ளை நடந்த ஆசிரியர் வீடு
  X
  கொள்ளை நடந்த ஆசிரியர் வீடு

  பழனியில் ஆசிரியர் வீட்டில் 60 பவுன் நகை- ரூ.7 லட்சம் பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  பழனி:

  பழனி அடிவாரம் வள்ளியப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 35). லட்சணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் தனது மனைவி ஜெயசந்திரா, மகள் அபுர்வா சகானா, தம்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோருடன் வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 23-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.

  இந்த சந்தர்ப்பத்தை பயன்டுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்தனர். பின்னர் உள் பகுதியில் உள்ள கதவுகளின் தாழ்பாள்களை நெம்பி உள்ளே சென்றனர். வீட்டுக்குள் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று மாலை சரவணக்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார்.

  அப்போது கதவு திறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அப்போது 60 பவுன் நகை ரூ. 70 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனதை பார்த்து பதறினார்.

  இது குறித்து பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் கை ரேகையை பதிவு செய் துள்ளனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது பழனி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.
  Next Story
  ×