search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தபோது எடுத்த படம்
    X
    மதுரையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தபோது எடுத்த படம்

    மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வங்கி, நிதி நிறுவன ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

    மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வங்கி, நிதி நிறுவன ஊழியர்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டம் நீடித்தது.
    மதுரை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையால் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.

    இந்தாண்டாவது நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்பினர் வலியுறுத்தி வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ சமுதாயமும், இளைஞர்களும், பொதுமக்களும் பொங்கி எழுந்தார்க்ள. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வரை போராடுவோம் என கூறி தமிழகமெங்கும் போராட்டத்தில் குதித்தனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

    மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம், மேலூர் உள்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்த போராட் டம் மதுரை நகரிலும் வெடித்தது.

    மதுரை பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் மாலை ஆங்காங்கே திரண்டு பேரணியாக தமுக்கம் மைதானத்திற்கு வந்தனர். அங்கு தமிழன்னை சிலை முன்பு அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பினர். நேரம் ஆக ஆக மாணவர்களும், இளைஞர்களும் பொதுமக்களும் சாரை சாரையாக வந்ததால் தமுக்கம் முன்புள்ள பகுதி மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வேறு வழியாக மாற்றி விடப்பட்டன.

    இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது. பகலில் வெயிலையும், இரவில் பனியையும் பொருட் படுத்தாமல் மாணவ - மாணவிகள், இளைஞர்கள் ஈடுபட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், காபி, டீ, பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை கொடுத்து உதவியதோடு போராட்டத்தை ஊக்கப்படுத்தினர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பலானவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அப்போது மத்திய-மாநில அரசே ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடு, தடை நீக்கு, பீட்டா அமைப்பை தடை செய், விவசாயிகளின் தற்கொலையை காத்திடு போன்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

    தமுக்கம், கோரிப்பாளையம் உள்பட பல இடங்களில் விடிய, விடிய கடந்த 3 நாட்களாக நடந்து வந்த மாணவர்களின் போராட்டம் இன்றும் நீடித்தது. இந்த போராட்டத்தில் மதுரை மட்டும் அல்ல வெளியூர் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வங்கி மற்றும் நிதி நிறுவனம், கார் ஷோரூம் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுரை ரெயில் நிலையம் கிழக்கு வாயில் எதிரே உள்ள மெயின்ரோட்டில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் தேசபந்து திடலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று 2-வது நாளாக கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கூடிய அவர்கள் இரவிலும் அங்கேயே தங்கி இருந்தனர்.


    Next Story
    ×