என் மலர்
செய்திகள்

பயிர் கருகியதால் பெண் உள்பட 3 விவசாயிகள் பலி
தஞ்சாவூர்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தமிழரசி (45). இவர் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்து இருந்தார்.
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது. இதனால் தமிழரசி வேதனையில் இருந்தார். வயலுக்கு சென்று திரும்பிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள கொடவிளாகம் ஊராட்சி கேவஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். பயிர் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூவலூரை சேர்ந்தவர் சுப்பையன் (60). இவர் 2 ஏக்கரில் சம்பா பயிரிட்டு இறந்தார். பயிர் கருகியதால் மனம் உடைந்து காணப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.