search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநிலத்திலும் தீபா பேரவை தொடக்கம்
    X

    கர்நாடக மாநிலத்திலும் தீபா பேரவை தொடக்கம்

    கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவை சேர்ந்த வக்கீல் ஆர். செல்வராஜ் என்பவர் தீபா பெயரில் பேரவையை தொடங்கி உள்ளார். இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. வக்கீல் பிரிவு நிர்வாகி ஆவார்.
    ஓசூர்:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு ஏற்று உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என்று தினமும் சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து தீபாவை வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தீபா பெயரில் பேரவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை (17-ந் தேதி) அறிவிக்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவை சேர்ந்த வக்கீல் ஆர். செல்வராஜ் என்பவர் தீபா பெயரில் பேரவையை தொடங்கி உள்ளார். இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. வக்கீல் பிரிவு நிர்வாகி ஆவார். மேலும் இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    பேரவை தொடங்குவது தொடர்பாக செல்வராஜ் சென்னை சென்று தீபாவை சந்தித்து ஆலோசனையும் நடத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தீபா பேரவை தொடக்கம் குறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் பெங்களூருவில் பல்வேறு இடங்களிலும் கோலார் தங்கவயல் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டு உள்ளது.
    Next Story
    ×